Saturday, April 1, 2017

மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!

எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்....
எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்......
எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்....
எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்....
எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்....
எங்கடா என் மொழி என்று கேட்டேன்.....

கடைசியா பதிலைச்சொன்னான்.....

இதையெல்லாம் வித்து தான்.....

உங்களுக்கு அரிசி கொடுத்தோம்....

மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்....

மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்....

மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்....

மானாட மயிலாட காண டிவியும் கொடுத்தோம்.....

கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்....

தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்...

அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்....

அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே ...!! என்றார்கள்....

யாரடா நீங்கள் ...? என்றேன்....

நாங்கள் தான் #அரசியல்வாதிகள்
என்றார்கள்.....!!

மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!! 

♨இமெயிலை கண்டுபிடித்த தமிழர் தேர்தலில் போட்டி

இ–மெயிலை கண்டுபிடித்தவர் அமெரிக்க வாழ் தமிழர் சிவா ஐயாத்துரை. இவர் தற்போது அமெரிக்காவில் ‘சைட்டோசால்வ்’ என்ற நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட் சபைக்கு சில தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக சிவா ஐயாத்துரை அறிவித்துள்ளார்.

அங்கு தற்போது செனட் சபை உறுப்பினராக ஜனநாயக கட்சியின் எலிசபெத் வாரன் என்ற பெண் உள்ளார். அவர் இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் சிவா ஐயாத்துரை தெரிவித்துள்ளார்.
     இவர்நமது நாடார் சமுகத்தை
          சேர்ந்தவர் என்பது  பெருமைக்குரிய விடயம்மாகும்
                        ✍
       🏹*சத்திரியபாசறை*🏹

பிச்சைகாரன்: சார்

பிச்சைகாரன்: சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

“வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

“உன்னை என்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

“என்னது பிஸ்னஸ் பார்ட்னரா...?"

ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

“ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம்  தேவையில்லை. அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின்  அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்…. “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட  பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்… “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….

இது தான் நமது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறது.

இறைவன் தான் பிஸ்னஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).

இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.

ஐம்புலன்களை நமக்கு கொடுத்து அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா? ஐம்புலன்கள் போதாது என்று கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான். இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… அது முடிவே இல்லாமல் தான் போய்கொண்டிருக்கும்.

இவ்வளவு தந்த அவனுக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன். நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக. நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

இறைவனை வணங்குவதோ, வேதங்களை படிப்பதோ, ஆலயத்துக்கு செல்வதோ, தொண்டு முதலானவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது சக மனிதர்களுக்கு உதவுவதோ – இவை யாவும் செய்வது நமக்காக தான். நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான். மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.

படித்ததில் பிடித்தது...

கேவலமான உண்மைகள்!!!!!!

1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40
லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக்
கிடைக்கிறது..!!

2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின்
விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால்
பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5
சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12
சதவிகிதம்..!!

4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு
வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும்,
தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக்
கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய
செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில்
பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச்
செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள்
மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட
கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும்
காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில்
விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc
இவையெல்லாம் செயற்கையான
ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகி
ன்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை
இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்)
தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும்
நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம்
விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று
கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து
வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை
மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை
சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே
மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து
விற்றால் வரி உண்டு..!!

10. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!
             
11.  வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,
சிலருக்கு படிக்கட்டாகவும்,
சிலருக்கு எஸ்கலேட்டராகவும்,
சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..

12.   பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும்
ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

13.  தோற்றுப்போய் வீடு திரும்புகையில்,
தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும்,
வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

 14. முதியோர் இல்லத்திற்கு
பணம் கொடுங்க,
பொருள் கொடுங்க,
உணவு கொடுங்க,
உடை கொடுங்க..
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..

15. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..

16.  டாக்டரை மறந்து விட்டு
நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும்
விசித்திரமான உலகம் இது.!

17. ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,
ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்
பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

18. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,
பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.

19.  அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..
  இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...

20 .கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்..
மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.!                

21. மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்..
ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

 21.  மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..
அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

 22.  ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான்,
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.

23.  ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க
சரிதான்..
ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க?

அறிவார்ந்த நண்பர்களே! இது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமாய் மனமுவந்து வேண்டுகின்றேன்!!!

Tuesday, March 7, 2017

கோயம்புத்தூர் பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று,,,

கோயம்புத்தூர் பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று,,,

அன்பார்ந்த பெற்றோர்களே!

உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.

எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

பரிச்சையில் வெற்றிபெறாத மாணவர்களில்..
ஒரு கலைஞன் இருப்பான்

அவனுக்கு கணிதம் தேவைப்படாது. அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான் அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.

ஒரு இசைஞானி இருப்பான் அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.

ஒரு விளையாட்டு வீரனிருப்பான் அவனது உடல் நலனே முக்கியமன்றி பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.

பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..

எடுக்காவிட்டால் எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன என்று

தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.

அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.

நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.

உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.

என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள். பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.

வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.

மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.

உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.
படித்ததில் ரொம்ப ரொம்ப பிடித்தது

முதலில் வரியை ஒழுங்காக நடைமுறை படுத்துங்க

5 லட்சம் சம்பாதிக்கிறேன், 2.5 லட்சத்துக்கு வரி கட்ட சொல்லிரீங்க சரி கட்டிட்டேன்.

மீதி உள்ள ரூபாய்க்கு வீடு வாங்க போறேன்,

அதுல்லையும் பத்திர பதிவுன்னு 14% வாங்குரீங்க,

நகை வாங்க போறேன் அங்கேயும் வரி.

சாப்பிட போறேன் அங்கேயும் வரி.

மக்களை சாகடிச்சி புடுங்குரீங்க.

கார் வாங்கும்போதே வரியும் சேர்த்து புடுங்குரீங்க அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கம் வசூலிக்கிரீங்க...

இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை கொடுத்தா!

நீ அதை தூக்கி கார்ப்பரேட் கம்பெனிக்கு லோன் கொடுப்பிங்க,                   கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பண்ணுவிங்கா!

கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடி கணக்கில் வரி பணத்த செலவழித்து விழா நடத்தி விருது கொடுப்பிங்க

லட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே அதை மீட்க என்ன நடவேடிக்கை எடுத்ததிங்கனு கேட்ட புரியாத & புரிஞ்சுக்க முடியாதபடி ஒரு பதில் சொல்லுவிங்க,

இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா? பதுக்கத்தான் செய்வான்.

முதலில் சட்டத்தை மாற்றுங்க. எல்லா சிஸ்டத்தை மாற்றுங்க.

சில மாதங்கள் கழித்தும் அவன் பணத்தை டாலராக தங்கமாக சொத்தாக வாங்கத்தான் செய்வான்.

முதலில் வரியை ஒழுங்காக நடைமுறை படுத்துங்க                    இவண்....                                    தேசத்தை உண்மையாக நேசிக்கும் யதார்த்த  மனிதன்       🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳   

திருநெல்வேலி

இன்று....
திருநெல்வேலிக்கு 226 வது மலர்ந்த தினம். 1790ம் ஆண்டு இதே நாளில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது தான் திருநெல்வேலி.

திரு=மதிப்பு
நெல்=உணவு
வேலி=பாதுகாப்பு

திருநெல்வேலி பிரசித்தம் பெற்றது; ஏன் தெரியுமா?

10 சிறப்பம்சம்களை கொண்டது.

1) ஈரடுக்கு மேம்பாலம் பெற்ற முதல் இந்திய நகரம்

2) தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிவதலம் பெற்ற நகரம்

3) தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேரை கொண்ட மாநகரம்

4) நான்கு ரத வீதிகளில் இருந்து வளர ஆரம்பித்த நகரம்

5) ஐந்து வகையான நிலங்கள் பெற்ற தமிழகத்தின் ஒரே மாவட்டத்தின் தலைநகரம்

6) தமிழ்நாட்டின் ஆறாவது மிகப் பெரிய நகரம்

7) சரிகமபதநிச என்ற ஏழு
ஸ்வரங்கள் பாடும் இசைத்தூண்களை கொண்ட ஒரே நகரம்

8) தினசரி எட்டு லட்சம் மக்களால் இயங்கிக் கொண்டிருக்கும் பெருநகரம்

9) ஒன்பது கி.மீ சுற்றளவு கொண்ட மாநகரம்

10) தமிழகத்திலேயே அதிகமாக பத்து அணைகளை கொண்ட செழிப்பான மாவட்டம்
11)தமிழ்நாட்டில் தொன்றி தமிழ்நாட்டிலேயே முடியும் ஒரே நதி
தென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென் தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும். இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.

தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத்தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லைத்தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை அண்ணாச்சி என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.

இது தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.

⚔பழகி பார் பாசம் தெரியும்...!

⚔பகைத்து பார் வீரம் தெரியும்...!

⚔நாங்க திருநெல்வேலிகாரங்க...!  

⚔சித்தர்களில் சிறந்த அகத்தியர் வளர்ந்த இடம் - திருநெல்வேலி

⚔காப்பியத்தின் மன்னன் தொல்காப்பியர் வளர்ந்த இடம் - திருநெல்வேலி

⚔வீரத்தின் அடையாளம் பாஞ்சாலங்குறிச்சி- திருநெல்வேலி

⚔தியாகத்தின் தியாகி வாஞ்சிநாதன் பிறந்த இடம் - திருநெல்வேலி

⚔முதன் சுதந்திரபோராட்ட வீரன், வீரத்தை முத்தமிட்ட மா மன்னன் பூலித்தேவர் (நெற்கட்டான் செவல்) - திருநெல்வேலி

⚔நாளிதழ்களின் அரசர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தது - திருநெல்வேலி

⚔கலைத்துறையின் singam ஹரி - திருநெல்வேலி

⚔ தமிழகத்தை அண்ணார்ந்து பார்க்க வைத்த நிகழ்ச்சி நீயா நானா இயக்குனர் மற்றும் தாயாரிப்பாளர் - திருநெல்வேலி

⚔ திருநெல்வேலிக்காரன் சாதிக்காத துறையும் இல்லை, கலையும் இல்லை

⚔தாகத்துக்கு தாமிரபரணி

⚔அருவிக்கு குற்றாலம்

⚔தென்றலுக்கு தென்காசி

⚔புலிக்கு களக்காடு&முண்டந்துறைவனவிலங்கு சரணாலயம்

⚔அழகுக்குக்கு சேரன்மகாதேவிகளக்காடு மலை

⚔படிப்புக்கு பாளையம்கோட்டை

⚔டேமுக்கு பாபநாசம்

ஆளை புடிக்க அல்வா
ஆளை முடிக்க அருவா

⚔தமிழுக்காக அன்றும் இன்றும் பாடுபடுவதில் திருநெல்வேலி ரத்தங்களுக்கு என்றும் பெரிய பங்கு உண்டு...

⚔ HCL, MGM, VGP,TVS சரவணா ஸ்டோர்ஸ் எல்லாம் திருநெல்வேலி....