Tuesday, March 7, 2017

முதலில் வரியை ஒழுங்காக நடைமுறை படுத்துங்க

5 லட்சம் சம்பாதிக்கிறேன், 2.5 லட்சத்துக்கு வரி கட்ட சொல்லிரீங்க சரி கட்டிட்டேன்.

மீதி உள்ள ரூபாய்க்கு வீடு வாங்க போறேன்,

அதுல்லையும் பத்திர பதிவுன்னு 14% வாங்குரீங்க,

நகை வாங்க போறேன் அங்கேயும் வரி.

சாப்பிட போறேன் அங்கேயும் வரி.

மக்களை சாகடிச்சி புடுங்குரீங்க.

கார் வாங்கும்போதே வரியும் சேர்த்து புடுங்குரீங்க அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கம் வசூலிக்கிரீங்க...

இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை கொடுத்தா!

நீ அதை தூக்கி கார்ப்பரேட் கம்பெனிக்கு லோன் கொடுப்பிங்க,                   கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பண்ணுவிங்கா!

கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடி கணக்கில் வரி பணத்த செலவழித்து விழா நடத்தி விருது கொடுப்பிங்க

லட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே அதை மீட்க என்ன நடவேடிக்கை எடுத்ததிங்கனு கேட்ட புரியாத & புரிஞ்சுக்க முடியாதபடி ஒரு பதில் சொல்லுவிங்க,

இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா? பதுக்கத்தான் செய்வான்.

முதலில் சட்டத்தை மாற்றுங்க. எல்லா சிஸ்டத்தை மாற்றுங்க.

சில மாதங்கள் கழித்தும் அவன் பணத்தை டாலராக தங்கமாக சொத்தாக வாங்கத்தான் செய்வான்.

முதலில் வரியை ஒழுங்காக நடைமுறை படுத்துங்க                    இவண்....                                    தேசத்தை உண்மையாக நேசிக்கும் யதார்த்த  மனிதன்       🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳   

1 comment: