Monday, March 6, 2017

நட்சத்திர கிரிக்கெட்

அன்புள்ள
பெரியோர்களே
தாய்மார்களே

வரும் ஏப்ரல் 17ல் சென்னையில்

கமல்
ரஜினி
விஜய்
விக்ரம்
விஷால்

போன்ற 5 கோடி முதல் 50 கோடி
வரை மட்டுமே
கஷ்டப்பட்டு
உழைத்து
நடித்து

கூலி வாங்கி

அடுத்த வேலை உணவிற்கே

வழியில்லாமல்
அல்லாடும்

கஷ்ட ஜீவனத்தில்
வாழும் ஆதரவற்ற
கூலித்தொழிலாளிகளுக்கு

தற்போது ஒதுங்க நிழல் இன்றி
கொளுத்தும் வெய்யிலில் வாடும்
திக்கற்ற கலைஞர்களுக்கு

சங்கக் கட்டிடம் கட்ட

நிதி திரட்ட நடத்தப்படும் கிரிக்கெட்டை

கண்டு நிதியளிக்க

மாதம் 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பாதித்து

சென்னை மாநகர புஷ் பேக்
தகர
நரக
ரக ரக
பேருந்துகளில்
வலம் வந்து
வளம் நொந்து
மனம் வெந்து

சொகுசு வாழ்க்கை வாழும்

தமிழ்க்குடி மகன்களை

இளிச்ச வாயர்களை

டாஸ்மாக் நேயர்களை

பிறந்த குழந்தையை
பாலுக்கு அழ விட்டு விட்டு

பண்பாட்டு துரோகிகளுக்கு
பாலாபிஷேகம் செய்யும்
பண்ணாடைகளை

நம்பிக்கையோடு அழைக்கிறோம்.

வாருங்கள்
வந்து எங்கள்
பண்பட்ட விளையாட்டை
பணம் கொடுத்து பாருங்கள்

மனைவி மக்களை மறந்து
கூக்குரல் எழுப்பி
எம்மை உற்சாகப்படுத்த வாருங்கள்

300 ரூபாய் சம்பளம் வாங்கும் ரசிகனிடம் காசுபறிக்க பார்க்கும் நடிகர் சங்கம் 30 கோடி சம்பளம் வாங்கும் நடிகனிடம் பணம் கேட்க மறுப்பது ஏன் ?
.
விட்டால் இவர்கள் வீட்டு மளிகை சாமான்கள் வாங்குவதற்கு கூட ரசிகனிடம் பணம் கேட்பார்கள் போல ..

.
இதை புரிந்து கொண்ட நடிகர் அஜித் மக்களிடம் பணம் பறிக்காதீங்க சகநடிகர்களிடம் பணம் கேட்டு நடிகர் சங்க கடனை அடையுங்கள் கட்டிடம் கட்டுங்கள் .... தினமும் தன் குடும்ப செலவுக்காக சம்பாதிக்கும் மக்களிடம் பணம் பறிப்பது முட்டாள் தனம் என்று தான் நடிகர் சங்கம் நடத்தும் கிரிக்கட் போட்டியை புறக்கனிக்கின்றார் ..

.
ஒரு நடிகரே நமக்காக நடிகர் சங்கத்தை புறக்கனிக்க மக்களாகிய நாம் ஏன் அந்த கொள்ளையை புறக்கனிக்க கூடாது ..
ஆம் யாரும் நேரில் சென்று அந்த கிரிக்கெட் போட்டியை காணவேன்டாம் ரஜினி கமல்ஹாசன் விஜய் சூர்யா விக்ரம் சிம்பு தனுஷ் இவர்களிடம் இல்லாத பணமா நம்மிடம் இருக்கின்றது ??.
.
இதை இப்பவே தடுத்தால்தான் அவர்கள் அடுத்து கக்கூஸ் கட்டவதெற்காலாம் நம்மை நாட மாட்டார்கள் .. 100 ரூபாய் கொடுத்து படம் தான் பார்க்க முடியும் ரசிகனால் ...
.
சென்னை கடலூர் வெள்ளத்தில் மூழ்கிய போது இந்த நடிகர் சங்கம் என்ன செய்தது ??
.
சிந்தியுங்கள் இந்த கருத்து பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள் .. புறக்கணிப்போம் நட்சத்திர கிரிக்கெட்டை####

தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி என்று வைத்துக்கொள்வோம்.

# மாதம்  70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

# மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

# மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசுஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

#நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும்.

#ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.

# திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.

# படப்பிடிப்புதளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கைகடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது.வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல்உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.

# இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.

# ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய்சம்பாதித்து10 கோடி வரிஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள்வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.

# பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டிடங்கள்கட்டுவது இவர்களிடம் விற்பதற்காக தான்.

# நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது.

நிற்க.
மேற்கூறிய இந்த ஏழைகளின் நடிகர்சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைக்க போகிறார்களாம்.

### புயல் வெள்ளத்தில்நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாய் நின்றபோது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்றுவெளிப்படையாக சொன்ன இவர்கள் தற்போது நம்மிடம் கிரிக்கெட் மூலமாக வசூல் என்ற பவருகிறார்கள்.

ஆகையால் மானமுள்ள நம் மக்கள் இந்த நட்சத்திரகிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க வேண்டும்.

### இந்த  அரசியல்வாதிகளிடம் ஏமாறுகிறோம். இந்த கூத்தாடிகளிடமும் ஏமாற வேண்டுமா#####

No comments:

Post a Comment